நியூ லுக்கில் நடிகை பிரியங்கா மோகன்..ரசிகர்கள் உற்சாகம்!
பிரியங்கா மோகன், துருக்கி சென்று அங்கு எடுத்த ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள நாயகிகளில் ஒருவர் பிரியங்கா மோகன். தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் என்ட்ரி கொடுத்த பிரியங்கா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியடைய, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.
பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனால் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரதர் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் OG படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், துருக்கி சென்று அங்கு எடுத்த ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.