செம்மை கரும்பு சாகுபடி..விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்த மாணவர்கள்!

Loading

பல்லவராயநத்தம் ஊராட்சியில் தஞ்சாவூர் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் வேப்பெண்ணெய் கரைசல் செய்முறை விளக்கம் செய்தனர்.

பண்ருட்டி. ஏப், 16- கடலூர் மாவட்டம் பல்லவராயநத்தம் ஊராட்சியில் தஞ்சாவூர் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி கிராமப்புற சூழ்நிலைகள் மற்றும் விவசாய தொழில்நுட்பங்களின் பற்றி பயிற்சி பெற்று வருகின்றனர். கரும்பு விவசாயி ஒருவருக்கு செம்மை கரும்பு சாகுபடியின் பயன்களை விளக்கினர்.

செம்மை கரும்பு சாகுபடி முறையானது கரும்பு சாகுபடியில் ஒரு புதிய அணுகுமுறை மற்றும் நீர் சேமிப்பு வழிகளில் ஒரு புதிய முயற்சி. இந்த முறையில் விளைச்சலை அதிகப்படுத்தும் உத்திகளோடு, தண்ணீர் சேமிப்பு குறித்தும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தி அதிகரிப்பதோடு நீர நிலை ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் உறுதுணையாய் இவை இருக்குமென்பது உறுதியாகிறது.பயிர் இடைவெளி 5 அடி இருப்பதால் ஊடுபயிர் சாகுபடி செய்ய முடியும் எனவே கூடுதல் இலாபம் விவசாயிகளுக்கு கிடைக்கும்.பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் முனைவர் விஜய்செல்வராஜ், இம்மாணவர்களை வழி நடத்துகிறார்.

0Shares