என்னை அதுக்கு கூப்பிட்டாங்க….சீரியல் நடிகை ரேகா ஓபன் டாக்!
சின்னத்திரை சீரியல் நடிகையாக பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரேகா நாயர். சில ஆண்டுகளுக்கு முன் பார்த்திபன் இயக்கத்தில் ரிலீஸான இரவின் நிழல் படத்தில் போல்ட்டான காட்சியில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பல விஷயங்களை செய்து வரும் ரேகா நாயர், அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகும் போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், கோயம்பத்தூரில் ஒரு லோக்கல் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக சென்றேன். அப்போது கோயம்பத்தூரில் 7 லோக்கல் சேனல் மட்டுமே இருந்தது.
7 சேனல்களிலும் அப்லிகேஷன் கொடுத்தேன். ஒரு சேனல் அழகா இல்லன்னு சொன்னாங்க, ஒரு சேனல் வெள்ளையா இல்லன்னு சொன்னாங்க. என்னோட தமிழ் பேச்சு எல்லோருக்கும் பிடித்திருந்தது ஆனா, அவங்களுக்கு நான் கவர்ச்சியான முகமா நான் இல்லாமல் இருந்தேன்னு தள்ளி தள்ளிவிட்டாங்க.