சேலம் ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருவிழா கோலாகலம்..ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்!
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருவிழா பங்குனி மாதம் 26-ம் நாள் 9-4-2025 புதன்கிழமை அம்மனுக்கு சிறப்பான அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது.
பின்பு காலை 11 மணியளவில் மாவிளக்கு எடுத்தல் பொங்கல் வைத்தல் ஆடு கோழி கிடா வெட்டுதல் இரவு 7 மணி அளவில் கரகம் எடுத்தல் அழகு குத்துதல் பூங்கரகம் எடுத்தல் ஸ்ரீ சக்தி அம்மன் குழு சார்பாக அம்மன் சத்தாபரணம் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது இவ்விழாவில் ஊர் கவுண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.