ஆண்டிபட்டி தனியார் பள்ளியில் யுகேஜி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா.!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ப்ரீ கேஜி மற்றும் எல்கேஜி குழந்தைகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் ப்ரீ கேஜி மற்றும் எல்கேஜி குழந்தைகளுக்கு கல்வி சார் சிறப்பு நாள் மற்றும் யுகேஜி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கி பெற்றோர்களுக்கு கல்வி சார் ஆலோசனைகளை வழங்கினார். பள்ளி நிர்வாகி தமயந்தி ,பள்ளி செயலாளர் மாத்யூ ஜோயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பாடப்பிரிவு நிறுவனத்தின் மேலாளர் ஷீபா, பாடத்திட்ட பயிற்சியாளர் சங்கரன் மற்றும் பிரதிநிதிகள் செந்தில் ,சரண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆக்ஸ்போர்ட் பாடத்திட்டம் பற்றி பெற்றோர்களிடம் உரையாற்றினர். விழாவில் மழலைச் செல்வங்கள் தாங்கள் கற்ற பாடல்கள் மற்றும் தொகுப்புகளை பெற்றோர்கள் முன்பு பாடி காட்டினர். மழலைச் செல்வங்கள் பட்டமளிப்பு விழா உடை அணிந்து சிறப்பு விருந்தினர்களிடமிருந்து பட்டமளிப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர் மேலும் பல்வேறு போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கவிதா, ராகினி ,பூமா ,பாண்டி செல்வி, திவ்யா உள்பட ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் ,பெற்றோர் ,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.