ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு முகாம்..ஆர்வமுடன் பதிவு செய்த மக்கள்!

Loading

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியைச் சார்ந்த மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு முகாமை பாஜக பிரமுகர் செந்தில் குமரன் துவக்கி வைத்தார்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரூபாய் 5 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டம் நாடு முழுவதும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.இதையடுத்து மக்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம் ஆங்காங்கே நடைபெற்றுவருகிறது.அந்தவகையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி மக்களுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆரோக்கிய யோஜனா மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாம் நடைபெற்றது.

முத்தியால்பேட்டை தொகுதி பாஜக பிரமுகர் செந்தில்குமரன் ஏற்பாட்டில் இந்த முகாம் அவரது தலைமையில் நடைபெற்றது. இதில் முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவு செய்தனர். காலை 8 மணிக்கு துவங்கிய இம்முகாம் இன்று முழுவதும் நடைபெறுகிறது. இதில் பாஜக பிரமுகர் செந்தில்குமரன் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டையை வழங்கினார். இதில் திரளான முத்தியால்பேட்டை தொகுதி பாஜக பிரமுகர்கள் மற்றும் செந்தில்குமரன் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

0Shares