எரதிம்மக்காள்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா..நடனமாடி அசத்திய மாணவ,மாணவிகள்!

Loading

ஆண்டிபட்டி அருகே உள்ள எரதிம்மக்காள்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.அதனை தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் மரிக்குண்டு ஊராட்சியில் உள்ளது எரதிமக்காள்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்யில் ஆண்டு தோறும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பரமசிவம் அனைவரையும் வரவேற்றுப் பேசி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஊர் பெரியதனம் வேலு, நாட்டாமை நாகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் ,கல்வி மேலாண்மை குழு சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி. வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கரகம், கோலாட்டம், திருக்குறள் ஒப்புவித்தல், ஓரங்க நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவ ,மாணவிகள் பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

0Shares