இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்வதில் விதி மீறல்..போக்குவரத்து காவல்துறைக்கு பத்து ரூபாய் சட்ட இயக்கம் கண்டனம்!

Loading

புதுச்சேரியில் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்வதில் போக்குவரத்து காவல்துறை விதி மீறலில் ஈடுபட்டு வருவதாக பத்து ரூபாய் சட்ட இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்க நிறுவனர் ரகு என்கின்ற ரகுநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி அனுமதி இன்றி வாடகை விட்ட இருசக்கர வாகனத்தை போக்குவரத்து காவல்துறை பறிமுதல் செய்தது. நடைபாதையில் ஆக்கிரமித்து வைத்ததாக. இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் போது அனைத்து வரியும் செலுத்தி தான் வாகனத்தை விற்பனை செய்யப்படுகிறது. யாரிடம் அனுமதி பெற வேண்டும். இருசக்கர வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகிறது.

நான்கு சக்கர வாகனங்கள் 100 அடி சாலை பல மாதமாக நின்று கொண்டிருக்கிறது. மற்றும் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக புதுச்சேரி சிட்டி முழுவதும் நிறுத்தப்படுகிறது ஏன் காவல்துறை பறிமுதல் செய்யவில்லை. அரியாங்குப்பம் போக்குவரத்து கண்காணிப்பு காவல் ஆய்வாளர் அவர்கள் வட்டாரத்தில் கடந்த 14 ஆம் தேதி மாசி மகம் அன்று ஒரு வாகனத்திற்கு மட்டும் தலைக்கவசம் அணியவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர். அன்று ஆயிரம் கணக்கில் வாகனங்கள் சென்றுள்ளது. சிசிடி பதிவுகளும் உள்ளது எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . என்று வெளிப்படை தன்மையாக வெளியிட வேண்டும். இல்லையென்றால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவலை கேட்கப்படும் தகவலை மறுக்கப்பட்டால் மதிய தகவல் ஆணையம் மேல்முறையீடு செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் . அரசு அலுவலகத்தில் தகவல் எந்த அடிப்படையிலும் மறுக்கக் கூடாது என்று சட்டம் 4 (1) b கூறுகிறது.

அதே சிக்னலில் கார் கம்பெனி விநாயக முருகன் டீ ஸ்டால் பல நிறுவனங்கள் சாலையில் 30 அடிக்கு மேல் நிறுத்தப்படுகிறது அது போக்குவரத்து காவல்துறை எஸ்பி காவல் நிலையத்திற்கு செல்லும் வழியிலே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார். சிக்னலில் பேருந்துகள் பயணிகளை ஏற்றி செல்கிறது போக்குவரத்துக்கு இடையூறாக சாலை நடுவிலே. இதனால் பல உயிர் விபத்துக்கள் நடைபெற்றது. 55 பேர் செல்லக்கூடிய பேருந்தில் சுமார் 120 க்கு மேல் ஏற்றப்படுகிறது. அதனுடைய கன எடைக்கு மேல் ஏற்றும் ஒவ்வொரு நபரிடம் ரூபாய் 200 ரூபாய் ஃபைன் செலுத்த வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் ஓட்டுனர் நடத்துனர் வாகன உரிமையாளர் மீதும் விதிக்க வேண்டும். இதுவரை எத்தனை பேர் இடம்புதுச்சேரி போக்குவரத்து பெறப்பட்டுள்ளது. போக்குவரத்து எஸ்பி மற்றும் உயர் அதிகாரிகள் வாகனத்தில் சீட்டு பெல்ட் அணியாமலே செல்கிறார் எத்தனை முறை ஒரு நாளைக்கு அவரிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் புதுச்சேரி 10 ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்தப்படும். புதுச்சேரி உள் துறை அமைச்சர் அவர்களிடம் மற்றும் மாண்புமிகு துணை நிலை ஆளுநர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்படும் என புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்க நிறுவனர் ரகு என்கின்ற ரகுநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.

0Shares