காட்பாடி வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்..திரளான பக்தர்கள் தரிசனம்!

Loading

கந்தனை வள்ளி மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவ கடைசி நாள் தேரோட்டத்தில் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் கந்தனை வள்ளி மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் ஆண்டு பிரம்மோற்சவ தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு கடந்த 3-ஆம் தேதி மலைக்கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் வேத பண்டிதர்கள் சிறப்பு வேத மந்திரங்கள் முழங்க கொடிக்கம்பத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு அன்று முதல் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிகளுக்கு பல்வேறு புஷ்ப மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் மலையின் அடிவாரத்தில் தோளில் சுமந்தபடி திருத்தேரில் அமர வைத்து 4 நாட்கள் தேரோட்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது..

இந்த நிலையில் கடைசி நாளான இன்று 4-வது நாள் தேரோட்டம் நிகழ்வில் காலையில் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், அரிசிமாவு, தேன், விபூதி, சந்தனம், குங்குமம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை தேரோட்டம் நடைபெற்று ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், பெங்களூர், ஆந்திரா பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து வழி நெடுகிலும் திரண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து வள்ளிமலை முருகனை மனமுருகி வழிபட்டுச் சென்றனர்.

உடன் வள்ளிமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஆற்காடு தொழிலதிபர் A.V.சாரதி காட்பாடி ஒன்றிய பெருந்தலைவர் வேல்முருகன் உட்பட கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் உடனிருந்தனர்.

0Shares