சர்வதேச மகளிர் தினம்.. தூய்மை பணியாளர்களை கௌரவித்த தனியார் பள்ளி மாணவர்கள்!
காரைக்காலில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பள்ளி மாணவர்கள் சேலைகளை வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் மார்ச் 8 நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது .இதை முன்னிட்டு நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்களும் ,அரசியல் பிரமுகர்களும் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.அதுமட்டுமல்லாமல் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் அமைப்பு சார்ந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தி நாடு முழுவதும் பெண்கள் மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் காரைக்கால் மாவட்டத்தில்ர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பள்ளி மாணவர்கள் சேலைகளை வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கிய அவர்களை கௌரவ படுத்திய தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி மாணவர்கள். இந்நிகழ்ச்சியில் காரைக்கால் நகராட்சி ஆணையர் சத்யா பங்கேற்று மேலும் கே.எம்.கே பள்ளி தாளாளர் மது கன்னையன், மஹேஷ் மான்சி கான்னையன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர் தொடர்ந்து சின்னஞ்சிறு பள்ளி குழந்தைகள் தூய்மை பணியாளர்களுக்கு சேலைகளை வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.