தனியார் பைனான்ஸ் நிறுவனம் அடாவடி வசூல்.. பத்து ரூபாய் சட்ட இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!

Loading

புதுச்சேரியில் தனியார் பைனான்ஸ் நிறுவனமான டாட்டா கேபிள் நிறுவனத்தின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் அதனை தொடர்ந்து அலுவலகத்தை முற்றுகையிடப்படும் என பத்து ரூபாய் சட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் தலைவர் ரகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் வருகின்ற 10.03. 2025 தேதி காலை 11.00 மணி அளவில் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். தகவல் என்னவென்றால் புதுச்சேரி தனியார் பைனான்ஸ் நிறுவனம் டாட்டா கேபிள் நிறுவனத்தின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் அதனை தொடர்ந்து அலுவலகத்தை முற்றுகை இடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்லாமல் துணைநிலை ஆளுநர் அவர்களிடம் புதுச்சேரி உரிமையும் வழங்கியதை ரத்து செ

ய்ய வேண்டும் என்று புகார் மனு அளிக்க படும். எந்த பைனான்ஸ் நிறுவனமே சும்மா வாகனத்திற்கு நிதி கொடுக்கவில்லை. வாகனம் ஐம்பதாயிரம் என்றால் வட்டி 50,000 ரூபாய் கந்து வட்டி போல் வாங்கப்படுகிறது. கந்து வட்டி வாங்கினால் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் நிதி நிறுவனம் என்ற பெயரில் கந்து வட்டி மற்றும் மீட்டர் வட்டியும் சேர்த்து . வாகனத்தின் பறிமுதல் செய்து கொள்ளையடித்து வருகிறது. ஒரு பொருளை வாங்கினால் அந்த பொருள் சரியில்லை என்றால் சேதாரம் என்னவோ அதற்கு போக மீதி பணத்தை திரும்பி பெறப்படுகிறது.

ஆனால் ஒரு டியூ கட்டவில்லை என்றால் வாகனத்தை உரிமையாளருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக திருடுகிறார்கள். ஒரு வீட்டில் சொந்த பந்தங்கள் இருந்தும் ஒருவருக்கு தெரியாமல் மற்றொரு பொருளை எடுத்தாலே திருட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுகிறது இது எந்த அடிப்படையில் சரியான விஷயமாக இருக்கும். எந்த அடிப்படையில் சரியான விஷயமாக இருக்கும். ஒரு வீடு வாடகை விட்ட பிறகு மூன்று மாதத்திற்கு முன்பே அவர்களுக்கு நினைவூட்டு கடிதம் வழங்க வேண்டும்.

அப்பொழுதுதான் வீட்டை காலி செய்ய உரிமையாளருக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கும் போது திடீரென்று ஒரு வாகனத்தை எடுப்பது திருட்டு தனத்திற்கு சமமானது அதனால் வண்டி திருடர்கள் மீது புகார் அளிக்கப்படும். தனியா நிதி நிறுவனம் என்ற பெயரில் ஏழை மக்களின் ரத்தத்தை உரியும் தனியார் நிதி நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க புதுச்சேரி 10 ரூபாய் சட்ட இயக்கம் தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் தலைவர் ரகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares