நாளை மீண்டும் ஆளுநர் மாளிகை முற்றுகை..பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு அறிவிப்பு!

Loading

மீண்டும் வேலை வழங்கும் கோப்பிற்கு அனுமதி அளிக்காமல் காலம் கடத்தி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், துணைநிலை ஆளுநர் அவர்கள் பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க ஒப்புதல் அளிக்கும் கோப்பிற்கு உடனடியாக அனுமதி அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை மீண்டும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாக புதுச்சேரி & காரைக்கால் பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி & காரைக்கால் பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய G.P தெய்வீகன் வெளியிடுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் நடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு பணியமத்தப்பட்ட சுமார் 2642 ஊழியர்களை அப்போது நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலை காரணம் காட்டி தேர்தல் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்து பணி நீக்கம் செய்து விட்டது ..அன்று முதல் கடந்த 10 ஆண்டு காலமாக மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்து பல கட்ட தொடர் போராட்டத்தினை நடத்திக் கொண்டு வருகின்றோம்,

அதன் பயனாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொதுப்பணி துறையில் பணி நீக்கம் செய்யப்பட்டு சம்பளம் பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கி மாதச் சம்பளமாக 10500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்கள்..

அறிவிப்பு செய்து சுமார் இரண்டு ஆண்டு காலமாக ஆன நிலையில் புதுச்சேரி அரசாங்க உயர் அதிகாரிகள் இதுவரை மீண்டும் வேலை வழங்கும் கோப்பிற்கு அனுமதி அளிக்காமல் காலம் கடத்தி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் துணைநிலை ஆளுநர் அவர்கள் பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க ஒப்புதல் அளிக்கும் கோப்பிற்கு உடனடியாக அனுமதி அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை 06-03-2025 வியாழக்கிழமை காலை 10:30 மணி அளவில் நியுடன் தியேட்டர் , அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்..மேலும் இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய G.P தெய்வீகன்,காரைக்கால் C. வினோத், E.சத்யாவதி, காரைக்கால் K. மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்ள இருப்பதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares