மொழிகளை அழிக்க பா.ஜ.க. ஆட்சியாளர்கள் ரகசியத் திட்டம்..மு.க.ஸ்டாலின் காட்டம்!

Loading

மொழியை திணிக்காதீர் என்று சொன்னால் ஆறு அறிவுள்ளோருக்கு புரிகிறது என்றும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு மட்டும் புரியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது,இந்திய ஒன்றியத்தால் இன்றைக்கு நாம் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகளையும் நெருக்கடிகளையும் தோழமைக் கட்சித் தலைவர்கள் விரிவாக விளக்கி, மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதைத் தடுத்திட வேண்டும் என கூறியுள்ளார் , மேலும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைத்திடவும் மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், பா.ஜ.க. ஆட்சியின் ஜனநாயக விரோதப் போக்குகளையும் சுட்டிக்காட்டி உள்ள மு.க.ஸ்டாலின் , இவற்றை எதிர்கொள்ளும் வலிமை கொண்ட இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான என் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். மேலும் அந்த நம்பிக்கை என்பது, என்மீதானதல்ல, உடன்பிறப்புகளாம் உங்களையும் உங்களில் ஒருவனான என்னையும் ஒருங்கிணைத்து வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை.
தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பது தான் பா.ஜ.க. ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக திணிக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம் என்றும் அதனால் தான் இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை? என்று கரிசனம் வழிவதுபோல கேட்கிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும் மொழியை திணிக்காதீர் என்று சொன்னால் ஆறு அறிவுள்ளோருக்கு புரிகிறது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு மட்டும் புரியவில்லை என்றும் பா.ஜ.க. ஆட்சியாளர்களின் ரகசிய திட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டது தான் திராவிட இயக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

0Shares