அந்த காட்சியில் நடித்துள்ளேன் பாருங்கள்..திவ்ய பாரதி ஓபன் டாக்!
முதல்முறையாக நான் ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளேன் என்றும் கிங்ஸ்டன் கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும்” என நடிகை திவ்ய பாரதி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவுக்கு’பேச்சுலர்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்ய பாரதி. ‘ஆசை’, ‘மதில் மேல் காதல்’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் திவ்ய பாரதி. கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘மகராஜா’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திவ்ய பாரதி.
இந்தநிலையில் தற்போது இவர், மீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்திருக்கிறார் திவ்ய பாரதி. கிங்ஸ்டன் எனபெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இப்படம் வருகிற மார்ச் மாதம் 7-ம் தேதி வெளியாக் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் திவ்ய பாரதி பேசுகையில், ‛இந்த படத்தின் கதையை கமல் என்னிடம் சொன்னபோது ஒரு லுக் அவுட் வீடியோவையும் காண்பித்தார் என்றும் அப்போதே இதில் நடிக்க முடிவு பண்ணிவிட்டேன் என கூறினார். மேலும் முதல்முறையாக நான் ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளேன் என்றும் கிங்ஸ்டன் கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும்” என்றார்.