நீட் தேர்வு அச்சம்: மாணவி எடுத்த விபரீத முடிவு.. விழுப்புரம் அருகே சோகம்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 2வது ஆண்டாக நீட் தேர்வெழுத பயிற்சிமேற்கொண்டு வந்த மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நீட் மூலம் நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லுாரிகளில் பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நீட் தேர்வு தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025- 26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேர்தி மார்ச் 7-ம் தேதி ஆகும்.
இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 2வது ஆண்டாக நீட் தேர்வெழுத பயிற்சிமேற்கொண்டு வந்த மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.