விஜய் சாதனையை முறியடித்த குட் பேட் அக்லி!! மாஸ் காட்டிய AK.!
பல கெட்டப்பில் நடித்துள்ள அஜித்தை பலர் கொண்டாடி வரும் நிலையில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் 17 மணிநேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் அஜித். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விடாமுயற்சி. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. விடாமுயற்சி படத்திற்கு பின் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் நேற்று பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகியது.
பல கெட்டப்பில் நடித்துள்ள அஜித்தை பலர் கொண்டாடி வரும் நிலையில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் 17 மணிநேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது வருகிறது.இந்நிலையில் 12 மணிநேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தளபதி விஜய்யின் மாஸ்டர் பட டீசர் வீடியோவை பின்னுக்கு தள்ளியுள்ளது சாதனை குறிப்பிடத்தக்கது.
24 மணிநேரத்தில் மாஸ்டர் பட டீசர் 19.5 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்று சாதனை படைத்த நிலையில் அதை அஜித்தின் குட் பேட் அக்லி பட டீசர் முறியடித்துள்ளது. தற்போது இதை வைத்து அஜித் ரசிகர்கள் கொண்டாட்டி வருகிறார்கள்.