எங்களுக்கு சந்தேகம் சாமி ..தொகுதி மறுசீரமைப்புக்கு தெலுங்கானாவில் கடும் எதிர்ப்பு!

Loading

தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களை ஒடுக்க ஒரு முயற்சி நடக்கிறது என்றும் இது ஜனநாயகத்தை சேதப்படுத்தும் என்றும் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கூறினார்.

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அந்தவகையில் இதன் மூலம் தென் மாநிலங்களில் செய்யப்படும் எல்லை நிர்ணயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளில் 8 இடங்கள் குறையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் இதுகுறித்து விவாதிக்க வருகிற 5-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை அவர் கூட்டிள்ளார்.

மேலும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோவையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா தென் மாநிலங்களில் ஒரு தொகுதி கூட குறையாது என உறுதி அளித்தார்.இந்த கருத்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக தெலுங்கானாவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இது குறித்து கூறுகையில்:-தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களை ஒடுக்க ஒரு முயற்சி நடக்கிறது என்றும் இது ஜனநாயகத்தை சேதப்படுத்தும் என்றும் என கூறினார்.மேலும் இதனை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் என்றும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக தென் மாநிலங்கள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

இந்தநிலையில் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமராவ் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1980-களில் தென்னிந்திய மாநிலங்கள் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்றி மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தின என்றும் மக்கள் தொகை குறைந்து வருவதால் நாடாளுமன்றத்தில் உங்கள் பிரதிநிதித்துவத்தை குறைக்கிறேன் என்று சொல்வது நீதியை கேலி செய்வதாகும் என்றும் தேசத்திற்கு நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் எல்லை நிர்ணயத்தை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

0Shares