சொத்து குவிப்பு வழக்கு.. முன்னாள் பிரதமர் கைது!

Loading

சொத்து குவித்ததாக மொரிசியஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் அவர்களை ஊழல்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஆப்பிரிக்கா அருகே உள்ள தீவு நாடாக மொரிசியஸ் உள்ளது. இந்திய பெருங்கடலில் குட்டித்தீவு நாடான மொரிசியசில் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். மேலும் அந்த நாட்டின் பிரதமராக பிரவிந்த் ஜக்நாத் பதவி வகித்து வந்தார். இதையடுத்து மொரிசியசில்கடந்த ஆண்டு நடந்த பொது தேர்தலில் அவர் தலைமையிலான கட்சி படு தோல்வி அடைந்தது.

அவர் முன்னதாக பாதுகாப்பு, நிதித்துறை, உள்துறை மற்றும் வெளியுறவு மந்திரியாகவும் பிரவிந்த் ஜக்நாத் பொறுப்பு வகித்தார். அப்போது பிரவிந்த் ஜக்நாத் பதவியில் இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து இந்தநிலையில் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.20 ¾ ஆயிரம் கோடி 2.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பிரவிந்த் ஜக்நாத் அவரை அந்த நாட்டின் ஊழல்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

0Shares