11 ஆண்டுகள் தங்கியிருந்த வங்கதேச தம்பதி கைது..திருப்பூரில் அதிரடி!
திருப்பூர்:
ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்த கணவன், மனைவி 2 பேரையும் நல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்காணித்து மத்திய அரசு கைது வருகின்றனர் .அந்தவகையில் சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள வடக்கு பரவூரில் சட்டவிரோதமாக வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தவலின் பேரில் எர்ணாகுளம் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இணைந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ‘ஆபரேசன் கிளீன்’ என்ற பெயரில் போலீஸ் ஐ.ஜி. வைபவ் சக்சேனா தலைமையில் நடைபெற்ற இந்த வேட்டையில் வடக்கு பரவூர் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் சிக்கினர்.
இதையடுத்து வங்காளதேசத்தின் டாக்காவை சேர்ந்த 3 பெண்கள், நேற்று சர்வதேச எல்லையை சட்டவிரோதமாக கடந்து இந்தியாவிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிட்டிங் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அப்போது இதில் அங்கு வேலை செய்த மொதிர் ரகுமான் அவரது மனைவி அஞ்சனா அக்தர் ஆகியோர் வங்கதேசம் டாக்கா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் அய்யம்பாளையம் திருமூர்த்தி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து நிட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.மேலும் இவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி பணியாற்றியது தெரியவந்தது.இதையடுத்து மேலும் இவர்களிடம் மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் ஆதார் கார்டுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கணவன், மனைவி 2 பேரையும் நல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.