துறவறம் எடுத்துக்கொண்ட 7 ஆயிரம் பெண்கள்..சனாதனத்திற்கு சேவை செய்வதாக உறுதிமொழி!

Loading

உத்தரபிரதேசத்தில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மகா கும்பமேளா விழாவில் திரிவேணி சங்கமத்தில் நீராடி சந்நியாச தீட்சை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 46 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு, வரும் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திற்கு வருகை தந்து புனித நீராடி வருகின்றனர்

இந்தநிலையில் இந்த கும்பமேளா நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள கும்பமேளா நிகழ்வின் போது ஏராளமான இளம் பெண்கள் துறவறம் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மகா கும்பமேளா விழாவில் திரிவேணி சங்கமத்தில் நீராடி சந்நியாச தீட்சை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது சந்நியாச தீட்சை எடுத்து துறவறம் மேற்கொண்ட பெண்கள் சனாதனத்திற்கு சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துள்ளனர் என்றும் துறவறம் பூண்ட பெண்கள் பெரும்பாலானோர் உயர்கல்வி பயின்றவர்கள் என்றும் உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares