லவ் டுடே இந்தி ரீமேக் படம் வெற்றி..தங்கையை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து பாராட்டிய ஜான்வி கபூர்!
தமிழில் வெளியாகி ஹிட் அடித்த லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் ‘லவ்யப்பா’ படத்திற்காக குஷி கடினமாக உழைத்திருப்பதாகவும் அதை நினைத்து பெருமைப்படுவதாகவும் ஜான்வி கபூர் கூறினார்.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இந்திய சினிமாவின் ‘முதல் பெண் சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டவர்நடிகை ஸ்ரீதேவி . இவர் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் அக்கா ஜான்வி கபூர் பல படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார்.
இந்தநிலையில் தங்கை , குஷி கபூர் தற்போது தமிழில் வெளியாகி ஹிட் அடித்த லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறார். ‘லவ்யப்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் கடந்த 7-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனக்களை பெற்று வருகிறது. இந்நிலையில், தங்கை குஷி கபூரை நடிகை ஜான்வி கபூர் பாராட்டி உள்ளார்.அதன்படி, அப்போது அவர் கூறும்போது ‘லவ்யப்பா’ படத்திற்காக குஷி கடினமாக உழைத்திருப்பதாகவும் அதை நினைத்து பெருமைப்படுவதாகவும் ஜான்வி கபூர் கூறினார்.