ஆம் ஆத்மி அதிர்ச்சி ..டெல்லியை கைப்பற்றுகிறது பாஜக.. பெரும்பான்மை இடங்களில் முன்னிலை!
டெல்லியில் பாஜக 40- க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 699 வேட்பாளர்கள் களம் கண்டனர்.ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவருகிறகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக 19 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை, வாக்கு எண்ணும் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 5 ஆயிரம் பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக முன்னிலை பெற்றுவருகிறது.தற்போதுவரை.
பாஜக: 42
ஆம் ஆத்மி: 24
காங்கிரஸ்: 01
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் டெல்லி முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால், தற்போதைய முதல்வர் அதிஷி, மனிஷ் சிசோடியா ஆகியோர் பின்னடவை சந்தித்துள்ளனர். ஆரம்ப கட்ட நிலவரப்படி ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் பின்னடவை சந்தித்து இருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பாஜக 40- க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி பார்த்தால் டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.