அரசு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் வளரிளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு .
புதுச்சேரி அரசு
நலவழித்துறை சார்பில் காலாபட்டு அரசு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில் வளரிளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு கூட்டம்.
புதுச்சேரி அரசு
நலவழித்துறை சார்பில் காலாபட்டு அரசு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பாக பெரிய காலாபட்டு கோல்பிங் மெட்ரிகுலேஷன் மேல்நிலைபள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடையே வளரிளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு தலைமை மருத்துவ அதிகாரி
பிரதீப்குமார் தலைமை தாங்கினார். மேலும் அவர் பேசுகையில் 10 வயது முதல் 19 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினர்க்கு ஏற்படும் உடல் வளர்ச்சி,
மன வளர்ச்சி மற்றும் சரிவிகித சத்துள்ள உணவுகளை பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மருத்துவ அதிகாரிகள பிரதாப், ரிக்து,
பெண் சுகாதார மேற்பார்வையாளர் ஷகிலா, சுகாதார ஆய்வாளர் இரமேஷ், சுகாதார உதவி ஆய்வாளர்கள் மதிவாணன், மதியழகன், கிராமப்புற செவிலியர் விருத்தம்பாள், பள்ளி முதல்வர் அண்டோணிராஜ், ஆசிரியர்கள் ஹென்றி ஜெரால்ட், ஜோசப் ஹம்சன் மற்றும் ஆஷா ஊழியர் ஜெயந்தி கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிம்ஸ் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெற்று கை கழுவும் முறைகள் பற்றியும் மற்றும் சத்தான சரிவிகித ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்படி ஆடல் பாடலுடன் மற்றும் விளக்க படங்களை காட்டியும் சிறப்பாக செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இறுதியாக மாணவ, மாணவிகளிடையே வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பிம்ஸ் நர்சிங் கல்லூரி உதவி பேராசிரியர் அனுசியா நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்ச்சிகான ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.