காரைக்கால் மாவட்டம் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் விழா

Loading

காரைக்கால் மாவட்டம் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் விழா- முன்னாள் அமைச்சர் நாஜிம் எம்எல்ஏ, நாக.தியாகராஜன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணா அவர்களின் 116-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட மாநில திமுக சார்பில் தலைமை அலுவலகமான கலைஞரகத்தில் அமைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்க்கு காரைக்கால் மாவட்டம் மாநில திமுக அமைப்பாளர்  நாஜிம்,எம்எல்ஏ அவர்களும், நாக.தியாகராஜன், எம்எல்ஏ அவர்களும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார்கள்
அதனை தொடர்ந்து கோட்டுச்சேரியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா  திருவுருவ சிலைக்கும், அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  அமைந்துள்ள அண்ணா  திருவுருவச் சிலைக்கும்  மாநில கழக அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் நாஜிம்,எம்எல்ஏ அவர்களும், என்டிஆர் என்று அழைக்கப்படும் நாக.தியாகராஜன், எம்எல்ஏ அவர்களும் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார்கள்
இந்த நிகழ்ச்சியில் மாநில கழக நிர்வாகிகள் , தொகுதி கழக நிர்வாகிகள் , கழகத்தின் அனைத்து அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
0Shares