அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்
அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் இராணிப்பேட்டை நகராட்சியில் ராஜேஸ்வரி திரையரங்கம் முதல் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பாரிவேர் ரோகா பாத்ரூம் புராடக்ட் பிரைவேட் லிமிடெட் சமூக பங்களிப்பு நிதி ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் மின் கம்பங்கள் மற்றும் 150 ஓல்ட் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையாளர் விநாயகம், நகராட்சி பொறியாளர் பரசுராமு, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.