நெகிழியை பயன்படுத்த தடைச் சட்டம் உடனடியாக இயற்ற வேண்டும் தமிழக அரசுக்கு மக்கள் நலப் பேரவை தலைவர் ஆ.ஹென்றி கடிதம்

Loading

நெகிழியை பயன்படுத்த தடைச் சட்டம் உடனடியாக இயற்ற வேண்டும்
தமிழக அரசுக்கு மக்கள் நலப் பேரவை தலைவர்  ஆ.ஹென்றி கடிதம்
அகில இந்திய ஜனநாயக மக்கள்  நலப் பேரவை நிறுவனர் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள்
பொதுமக்கள் நலன்  கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், நெகிழி (Plastic) பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் மிகவும் பாதிப்படைகிறது எனவும்.
இதனை கருத்தில் கொண்டு மாநில அளவில் தமிழக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் 14 வகையான நெகிழிப் பொருட்கள் மீதான தடையை நடைமுறைக்குக் கொண்டுவந்தது எனவும்.
மீண்டும் மஞ்சப்பை என்கின்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது, அனைத்து தரப்பு மக்களாலும் பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டத்தை அரசு முழுமையாக செயல்படுத்தபடாததால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
மேலும் தடைசெய்யப்பட்ட நெகிழி (Plastic)  விற்பனை மற்றும் பயன்பாடு ஆரம்பத்தில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளின் தொடர் நடவடிக்கை மற்றும் சோதனைகளினால் குறைந்து காணப்பட்டாலும்,  நாளடைவில்  நெகிழி பொருட்களின் பயன்பாடு அதிகரித்து, அனைத்து இடங்களிலும் மிகச்  சுலபமாக பயன்படுத்தும் வகையில் வெளிப்படையாக கிடைக்கின்றது.
மேலும் 2024 ஆம் ஆண்டு  சென்னையில் நடைபெற்ற பொருட்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கடையில் “மீண்டும் மஞ்சப்பை” திட்டம்
 காட்சி பொருளாக மட்டும் தான் இருந்தது. மஞ்சப்பை வழங்கும்  இயந்திரத்திலிருந்நு  (MACHINE) மஞ்சப்பை வரவில்லை.
உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்  பொருளாகிய வெள்ளி இரசாயன படலம் கலந்த உறையை (Silver Foil Cover) உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
காரணம் தரம் குறைந்த இந்த வகை (Silver Foil Cover) உறைகள் கையில் எடுக்கும் போதே அதன் மேல் பூசப்பட்டுள்ள இரசாயனம் கலந்த வேதிப்பொருள் கையில் ஒட்டுவதுடன், உணவு பொருட்களுடன் கலந்து வயிற்றுக்குள் சென்று உடல் நலத்திற்கு மிகப்பெரிய கேட்டினை தருகிறது.
தற்போது இந்த (Silver Foil cover) உறைகள் உணவகங்கள், குளிர்பான கடைகள், சூப் மற்றும் தேநீர் கடைகளில் அதிக பயன்பாட்டில் உள்ளது.
SILVER FOIL COVER பயன்பாட்டால் புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் மருத்துவர்கள் இவ்வகை நெகிழியை பயன்படுத்த கூடாது என எச்சரிக்கையும் செய்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி, தமிழக அரசும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் சோதனைகளை அதிகப்படுத்தி, சமரசமின்றி நெகிழி மற்றும் சில்வர் பாயில் கவர்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டினை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.
மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான நெகிழி பட்டியலுடன் 15 வது பொருளாக இந்த சில்வர் பாயில் கவர்களையும் சேர்த்து உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் எனவும்.
மேலும் இதனை தொடர்ந்து கண்காணிக்கவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும், தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் 6.00 மணிமுதல் 10.00 மணி வரையிலும் சிறப்பு
அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும்.
நெகிழி இல்லா சமுதாயத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மக்கள் நலனை பேணவும், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நெகிழி மற்றும் சில்வர் பாயில் கவர்களை பயன்படுத்த கூடாது எனவும். இவைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை குறித்தும் விளக்கி (AWARENESS VIDEO) விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட வேண்டும் எனவும் அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் சார்பாக அதன் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழக அரசுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *