தமிழில் நடிக்க வருகிறார் தேவயானி சர்மா

Loading

தமிழில் நடிக்க வருகிறார் தேவயானி சர்மா
டெல்லியை பூர்வீகமாக கொண்ட நடிகை தேவயானி சர்மா, இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கிறார். 2021ம் ஆண்டு, ரொமான்டிக் என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் தமிழில் அறிமுகமாகிறார். அவர் கூறுகையில், ‘இந்தி, தெலுங்கு என்ற மொழிகளில் நான் படங்கள் பண்ணினாலும் எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது.
சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்பு திறனை முழுவதும் செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம். வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே. இதற்கான ஒரு முழு வீச்சில் இறங்கி உள்ளேன், அதற்கான வேலையும் தொடங்கி விட்டது’ என்றார்.

0Shares

Leave a Reply