சென்னை டி ஏ வி கல்வி குழும் ,TTK VHS ரத்த வங்கி இணைந்து ஒரு நாள் ரத்ததான முகாம்
சென்னை டி ஏ வி கல்வி குழும் ,TTK VHS ரத்த வங்கி இணைந்து நடத்திய
ஒரு நாள் ரத்ததான முகாம் இன்று சென்னை கோபாலபுரம் டிஏபி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த ரத்த தான முகாமில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர் .18 வயது முதல் 60 வயது உடையவர்கள், எடை 45 வயதுக்கு குறையாமல் இருந்தவர்கள் , காய்ச்சல் ,சாதாரண இருமல், தொண்டை கரகரப்பு, கடந்த மூன்று மாதங்களில் ரத்த தானம் செய்யாமல் இருத்தல் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் இல்லாதிருத்தல் மற்றும் கடந்த ஆறு மாதங்களில் ஏதேனும் பெரிய நோயினால் தாக்கப்பட்டாமல் இருத்தல் மற்றும் பெரிய அறுவை சிகிச்சை போன்றவை இல்லாதவர்களிடமிருந்து இந்த ரத்த தானம் பெறப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.