சேமிப்பு பழக்கத்தை தொடங்கிய அங்கன்வாடி குழந்தைகள்
கோவில்பட்டியில்
சேமிப்பு பழக்கத்தை தொடங்கிய அங்கன்வாடி குழந்தைகள்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்,பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும்
அக்.30ம் தேதி உலகசிக்கன நாளாக கடைபிடிக்கப்படுகிறது. 1924ம் ஆண்டுஇத்தாலியின் மிலான்நகரில் நடந்த சர்வதேச சேமிப்பு வங்கி மாநாட்டின் போது
அக்.31ம்தேதியை உலக சிக்கன நாளாக அறிவித்தனர். இருப்பினும் 1984ம் ஆண்டு அக்.31ம் தேதி நம் நாட்டின் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதால் இந்தியாவில் அக்.30ம் தேதி உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் எல்கேஜி, யூகேஜி மாணவர்கள் சிக்கனத்தை கடைபிடித்து சேமிப்பு பழக்கத்தை உருவாக்கிட உண்டியலில் ஒரு ருபாய் நாணயத்தை இட்டு தொடங்கினர். அனைவருக்கும் மண் உண்டியல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜுன்னிசா பேகம் தலைமை வகித்தார்.
பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார்.
ஐசிடிஸ் மேற்பார்வையாளர் ராணி விஜயா வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் டாக்டர் சம்பத்குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மண்உண்டியலில் ஒரு ருபாய் வழங்கி சேமிப்பு பழக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதில் ஆசிரியர் நர்மதா, அங்கன்வாடி உதவியாளர் பர்ஜானா,உள்பட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
முடிவில் பள்ளி தலைமையாசிரியர் சுப்பாராயன் நன்றி கூறினார்.