பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறிப்பு 7 பேர் கைது ..!
பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறிப்பு 7 பேர் கைது ..!
ஈரோடு செப்டம்பர் 19
ஈரோட்டிற்கு வேலை தேடி வந்த வடமாநிலத்தவர்களை கடத்தி வைத்து பணம் பறித்த கும்பலை ஈரோடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
பீகாரில் இருந்து ரயிலில் பயணம் செய்த பீபன் குமார் என்பவர் ஈரோட்டில் கூலி வேலை இருப்பதாக கூறி ரயிலில் கேரளா சென்று கொண்டிருந்த வால்மீகி என்பவரை நண்பராக்கி அவருடன் பயணித்த 5 நபர்களை ஈரோட்டில் வேலை இருப்பதாக கூறி ஈரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்து பிறகு பீபன் குமார் உதவியுடன் புகழேந்தி மற்றும் 9 நபர்கள் வால்மீகியுடன் வந்த ஜிதேந்தர் குமார், வினய் குமார், பவன்குமார், அசோக்குமார், சித்தார்யக்குமார் ஆகியோரை ஈரோடு பெரிய சேமூர் தென்றல் நகர் பகுதியில் உள்ள ஒரு பெரிய கேட் போட்ட கட்டிடத்தில் அவர்களை தங்க வைத்து துன்புறுத்தி யுள்ளனர் ,அவர்களது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர் பிறகு புகழேந்தி என்பவருடைய கூகுள் அக்கவுண்டில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை செலுத்தியுள்ளனர் இதில் பீபன் குமார் என்பவருக்கு புகழேந்தி கணக்கில் இருந்து ரூ 24 ஆயிரத்தை செலுத்தியுள்ளார் பிறகு டெம்போ ட்ராவலர் ஒன்றை கடத்தி அதில் வடநாட்டில் இருந்து வந்த நபர்களை கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலம் அருகே விட்டு விட்டு பீகாரருக்கு செல்ல பஸ்ஸிற்கு பணமும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது கடத்தப்பட்ட நபர்கள் மீண்டு சென்னை சென்றவர்கள் அங்கு அவர்களின் நண்பரான பூசான் வீட்டில் தங்கி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்ற பிறகு அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் ஏழு பேரை கைது செய்துள்ளனர் அவர்களிடம் இருந்து ரூ.10,000 மற்றும் கணக்கில் உள்ள பணத்தை மீட்பதாகவும் போலீசார் தெரிவித்தனர் ஈரோடு எஸ்.பி., பேட்டியில் தெரிவித்துள்ளதாவது…. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரயிலில் பயணம் ஆகும் பொழுது ஈரோட்டில் ஏற்கனவே வேலையில் உள்ள தீபன் குமார் இவர் மீது வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது என்றும் இவர் மூலமாக ஈரோட்டை சேர்ந்த மேற்கொண்டு ஒன்பது நபர்களுடன் கூடி அடித்து துன்புறுத்தி உள் காயங்கள் மட்டுமே உள்ளதாக தெரிய வருகிறது எனவும் தற்போது பத்தாயிரம் வைத்துள்ளோம் அவர்களது வங்கிக் கணக்கில் இருப்பதை விசாரணை நடந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார் கைது செய்யப்பட்ட ஏழு நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்றும் பேட்டியின் போது விநாயகர் சதுர்த்தி விழாவில் மாவட்டத்தில் 1350 லொகேஷனில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு வருகிற 24-ஆம் தேதி வரை ஊர்வலம் ஆக எடுத்து கரைக்கப்பட உள்ளதாகவும் சக்தி மற்றும் தாளவாடி பகுதியில் 900 போலீசார் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் நகர் கொள்ளை யில் 150 பவுன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் மூன்று பேர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார் பேட்டியின் போது ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.