எலவனாசூர் கோட்டையில் மக்களை தேடி மனு பெரும் முகாமில் அமைச்சர் ஏவ வேலு மனுக்களை பெற்றார்
எலவனாசூர் கோட்டையில் மக்களை தேடி மனு பெரும் முகாமில் அமைச்சர் ஏவ வேலு மனுக்களை பெற்றார்
உளுந்தூர்பேட்டை16
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட எலவனாசூர்கோட்டையில்மக்களை தேடி மனு பெரும் முகாமைதொடக்கி வைத்துபொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலுபொதுமக்களிடம் மனுக்களைபெற்றார் .
எலவனாசூர்கோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி நடைபெற்ற மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமிற்கானஏற்பாட்டினைஉளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜவேல் ஏற்பாடு செய்திருந்தார் இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் AJ. மணிக்கணன் வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில் பொதுமக்கள் எந்த வகை பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் நேரில் சென்று மனுக்கள் பெற்று உரிய விசாரணை செய்து உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் தமிழக முதல்வர் மக்களை தேடி நீங்கள் செல்லுங்கள் என்றுஅறிவுறுத்தி வருகிறார் அதன் பெயரில் தமிழகம் முழுவதும் அனைத்து அமைச்சர்களும் சென்று மனுக்களை பெற்று உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றுகூறினார் .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ,நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ,திட்ட இயக்குனர் மணி ,மாவட்டவருவாய் அலுவலர்சத்தியநாராயணன் ,கோட்டாட்சியர்யோக ஜோதி ,மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி , உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு , துணைத் தலைவர் வைத்தியநாதன் ,உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ராஜ் ,மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சரவணன் , உதவி அலுவலர் சிவகுமார் ,விடாத ஊராட்சி மன்ற தலைவர் நந்தகோபால் ,நகர மன்ற கவுன்சிலர்கள் டேனியல் ராஜ் , செல்வகுமார் ,ரமேஷ் பாபு , மாலதி ராமலிங்கம் , சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.