5.கோடியே 40. லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை துவக்கி வைத்தார் உணவுத்துறை அமைச்சர்.

Loading

ஒட்டன்சத்திரம் நகர்புற வார்டுகளில் சுமார் 5.கோடியே 40. லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை துவக்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட  வார்டுகளில் சுமார் 5.கோடியே 40.லட்சம் மதிப்பீட்டில் பழனி கோட்டாட்சியர் சிவகுமார் தலைமையில் திட்டப் பணிகளை உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி துவக்கி வைத்தார் இதில் தார் சாலைகள் அமைப்பதற்கு பூமி பூஜை,புதிய நியாய விலை கடைகளை திறந்து வைத்து உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது திண்டுக்கல் மாவட்டத்தில்
47.ஆயிரம் குடும்ப அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டு உள்ளதென்றும் அதில் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு சுமார் 7000 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் 6.வது வார்டில் சுமார் 25.லட்சம் மதீபீட்டில் இலவச கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணியும் இன்று துவங்கப்பட்டிருக்கிறது அதுமட்டுமின்றி ஒட்டன்சத்திரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவீனமயமாக்கப்பட்ட ஐந்து மாடி மருத்துவமனை கட்டிடம்
கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்கியதும் அந்தப் பணி இப்போது தொடங்கப்பட்டு உள்ளது என்றும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு ரூபாய் 1000 கோடியை  தமிழக முதல்வர் நமது தொகுதிக்கு வழங்கி மேம்படுத்தி இருக்கிறார்  மேலும் திண்டுக்கல் பழனி செல்லும் சாலையில் குழந்தை வேலப்பர்
கோவிலை சுற்றி நவீன முறையில் நடைபாதை அமைத்து பக்தர்கள  சிறப்பு வழிபாடு செய்யும் வகையில் கட்டப்படு என்றும், அதன் அருகிலேயே அனைவருக்கும் வீடுவழங்கும் திட்டத்தில் கீழ்  அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் கட்டி தரப்படும்என்று பேசினார்  இந்நிகழ்ச்சியில் நிரைவில் தூய்மை பாரத இயக்கம் ஊரக வளர்ச்சி துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் கிராம ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள் வழங்கப்பட்டன இதில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, நகர் மன்ற தலைவர் திருமலைச்சாமி துணைத் தலைவர் வெள்ளைச்சாமி ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துசாமி
வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ்,மற்றும் அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் ஊராட்சி மன்ற தலைவர்களும் பொதுமக்கள் என பேருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply