ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது :
திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழக பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை, கூடுதல் காவல்துறை இயக்குநர் அருண் உத்தரவின் பேரில் எஸ்பி.கீதா மேற்பார்வையில், டிஎஸ்பி நாகராஜன் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் சதிஷ் மற்றும் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெரிய ஓபுளாபுரத்தில் 4 டன் எடை கொண்ட ரேசன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேற்கொண்ட சோதனையில் எவ்வித அனுமதியுமின்றி பெரிய ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார், முத்து மற்றும் குமார் ஆகியோர் பொது மக்களிடமிருந்து ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திரா மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து முத்து மற்றும் குமார் ஆகியோரை கடந்த 19-ந் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.இதில் தொடர்ச்சியாக அரிசி கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குமார் என்பவரை திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் கள்ளச்சந்தைகா ரர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் (குண்டாஸ்) கீழ் குமாரை அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து திருவள்ளுர் கிளைச் சிறையிலிருந்த குமாரை சென்னை புழல் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றி அடைக்கப்பட்டார்.