ஆக்னெஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 23ஆம் ஆண்டு விழா
கோவை ஆக்னெஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 23 ஆம் ஆண்டு விழாவில் மதிப்பிற்குரிய சிந்தனை கவிஞர் டாக்டர்.கவிதாசன் அவர்களுக்கு பல லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியாமை இருள் அகற்றி அறிவொளி ஏற்றிய அறப்பணியை பாராட்டி அறிவொளி செல்வர் எனும் விருது வழங்கப்பட்டது விருதை இந்திய விமானப்படையின் சிறந்த சிற்பி எனும் விருது பெற்ற பெயித்புல் செக்யூரிட்டி சர்வீஸ் நிர்வாக இயக்குனர் சேவை செம்மல் ஜி.எஸ். நாயகம், கல்வி சேவைக்காக ராஜ் டிவி நிர்வாகத்தால் வழங்கிய சிறந்த கல்வி சேவைக்கான விருதைப் பெற்ற ஆக்னெஸ் பள்ளியின் தாளாளர் எஸ். சுரேஷ் வாரி, மெடிக்கல் அகாடமியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி. லோகேஷ், கோவை காட்வின் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் ஏ. காட்வின், மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் நவீன் அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ், வாரி மெடிக்கல் அகாடமியின் கல்வி அதிகாரி எஸ். சுகுமார் அவர்களும் சாந்தாமணி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் ரங்கநாதன் அவர்களும் இணைந்து வழங்கினார்கள். இந்த விழாவில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளும் நல மையத்தின் மாநில துணைத்தலைவர் பாஸ்டர் டாக்டர் எம்.டபிள்யூ.ராஜன், சிறுபான்மை கிறிஸ்தவ அமைப்பின் கோவை மாவட்ட துணை தலைவர் கோவை டி.செல்வா மற்றும் ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.