பாலா படத்தில் கீர்த்திக்கு பதில் ரோஷினி பிரகாஷ்
பாலா படத்தில் கீர்த்திக்கு பதில் ரோஷினி பிரகாஷ்பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘வணங்கான்’ படம், ஒரு ஷெட்யூலுடன் திடீரென நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகினார்.இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், “வணங்கான்’ திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்” என்று கூறியிருந்தார்.இந்நிலையில் இந்தப் படத்தில் அருண் விஜய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 9-ம் தேதி கன்னியாகுமரி அருகே தொடங்குகிறது. 25 நாட்கள் முதல் ஷெட்யூல் நடக்க இருக்கிறது.இதில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி இருந்தார். கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகியதால், கன்னட நடிகை ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தமிழில் ‘ஏமாலி’, ‘ஜடா’ படங்களில் நடித்துள்ளார்.