மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் திப்ப சமுத்திரம் மற்றும் கீழ் கிருஷ்ணாபுரம் ஊராட்சிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், அரசு நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமேனன், வருவாய் கோட்டாட்சியர் திருமதி கவிதா, தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் தனஞ்செயன், மாவட்ட வழங்கள் அலுவலர் திருமதி சுமதி, அணைக்கட்டு வட்டாட்சியர் ரமேஷ், கீழ் கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி நஸ்ரின் பானு, திப்பசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி புஷ்பா கிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.