போலி பத்திரிக்கையாளரை அதிரடியாக கைது செய்த
அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்த போலி பத்திரிக்கையாளரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை,கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் வட்டார மருத்துவ அலுவலர் Dr.செல்வி என்பவர் திருநாவலூர் காவல் நிலையத்தில் திருநாவலூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன்(34) த/பெ பாபு என்பவர் குடிபோதையில் தான் ஒரு பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில்மருத்துவபணிசெய்யவிடாமல்தடுத்துதகராரில்ஈடுபட்டதாககொடுத்தபுகார்மீதுவழக்குபதிவுசெய்யப்பட்டது.இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் போரில் திருநாவலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.அசோகன் அவர்கள் மேற்படி பாண்டியனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் பத்திரிக்கையாளருக்கான அங்கிகாரம் இல்லாத அடையாள அட்டையை வைத்து கொண்டு குடிபோதையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அரசு மருத்துவரை ஆறுவறுக்கதக்க வகையில் பேசி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். எனவே மேற்படி குற்றத்திற்காக கைது செய்யபட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.