கல்வராயன்மலை பகுதியில் 5,000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கல்வராயன்மலை பகுதியில் 5,000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைகள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊரல்களை அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் கைது செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இந்நிலையில். கச்சிராபாளையம் வட்ட ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வெள்ளேரிக்காடு கிராமத்தில் புளிய மரத்து சுனை மற்றும் வெதூர் கிராமத்தில் எருக்கம் பட்டு ரோடு அருகே மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 25 பிளாஸ்டிக் பேரல்களில் தலா 200 லிட்டர் வீதம் 5,000 லிட்டர் சாராய ஊரல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.