ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் .

Loading

பாலக்கோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் .

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்ததில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றியை பாலக்கோடு பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் பட்டாசு கொடுத்து இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்.இந்நிகழ்சிக்கு பாலக்கோடு காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளர் தக்காளி கணேசன்,திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், மாவட்ட விவசாயிகள் பிரிவு தலைவர் அன்பழகன், முத்துசாமி திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாலாஜிகுமார், ரகமத்துல்லா சீதாராமன், ஆனந்தன் மற்றும் திமுக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply