மாணவர்கள் பணத்தையும் பர்சையும் ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம்மல்யுத்த மாணவர்கள் ஹரிஹரன், அரியபுத்திரன், அரவிந்தன், சூர்யா ஆகியோர் மருத்துவ சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் புதுவை மாநிலம் கன்னிக்கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது கீழே ஒரு பர்ஸ் கிடந்ததை கண்டு எடுத்துப் பார்த்ததில் அதில் ஆதார் கார்டு மற்றும் பணம் ரூபாய் இருந்தது. உடனே மல்யுத்த பயிற்சியாளர் ராஜேஷ் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ராஜேஷ் அவர்கள் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் S. கரிகால் பாரி சங்கர் அவர்களிடம் தகவல் கூறி பணத்துடன் பர்சை ஒப்படைத்தனர். கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆதார் அட்டையில் ஸ்ரீதரன் கோபாலகிருஷ்ணன் கூடுவாஞ்சேரி இருந்ததை கண்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தொடர்புகொண்டு விபரத்தை கூறி ஸ்ரீதரன் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் தகவல் தெரிவித்தனர். கோபாலகிருஷ்ணன் வயது 75 அவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து திருநள்ளாறு காரில் சென்று கொண்டிருந்த போது தனது பர்ஸ் தொலைந்து விட்டதாக கூறினார். அவருக்கு வயது 75 என்பதால் பணம் மற்றும் மணிபர்சை அவரது உறவினரான ராஜஜெயசீலன் அவர்களிடம் துணை காவல் கண்காணிப்பாளர் S. கரிகால் பாரி சங்கர் அவர்கள் முன்னிலையில் மல்யுத்த மாணவர்கள் பணத்தையும் பர்சையும் ஒப்படைத்தனர். மாணவர்களின் நேர்மையை துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.