சாதனை படைத்த நாமக்கல் மாவட்ட பள்ளி மாணவன்….!
நாமக்கல் மாவட்டம் மெட்டாலாவைச் சார்ந்த கலைமகள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பெ.தணிக்கை வேலவன். உலக அறிவியல் நாளான பிப்ரவரி 28ஆம் தேதி கண்காட்சிக்காக மனித நகர்வுகள் கொண்ட மினி ரோபோட் ஒன்றை சொந்த முயற்சியில் தயாரித்துள்ளார். அந்த இயந்திரமானது சாதனையை படைத்துள்ளது. இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நியூட்டன்ஸ் மூன்றாவது லாவின்படி இயங்குவதால் எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு இயங்கும் எனவும் இதன் மூலம் தான் அறிவியல் மூலம் கொண்ட ஆர்வத்தினால் தயாரிக்கப்பட்டது என மாணவன் தெரிவித்து இருக்கிறார். இந்த இயந்திரம் தயாரிப்பதற்கு பெற்றோர்களும் சகோதரனும் செய்த உதவியே முக்கிய காரணம் எனவும், இது அந்த மாணவனின் குடும்பத்திற்கு கிடைத்த முதல் வெற்றி எனக்கூறி மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.