அரசு மதுபான கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் :
திருவள்ளூர் மாவட்ட சி.ஐ.டி.யு அலுவலக வளாக கூட்டரங்கத்தில் மாநில டாஸ்மாக் ஊழியர் சம்மேளன குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாநில செயலாளர் இ.பொன்முடி தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் ஜி.சந்திரன், மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், சிறப்பு அழைப்பாளராக அந்தச் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் பங்கேற்றார்.இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கடைகளில் விற்பனையாகும் காலி பாட்டில்களை திரும்ப பெறும் பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தக் கூடாது. மதுபான கடைகளுடன் இணைந்த பார்களை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் உரிமம் பெறாமல் நடத்துவதால் அரசுக்கு இழப்பீடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாநில அளவில் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள தொழிலாளர்கள் சம்பந்தமான வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்காமல் காலதாமதம் செய்வதை கண்டித்து வரும் மார்ச்.7-இல் டிஎம்எஸ் வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் கே.பி.ராமு, ஜான் அந்தோணி ராஜ், முருகன், கே.புஷ்பராமன் மற்றும் ஜி.நந்தகோபால், ஜி.ராமச்சந்திரன், ட்டி.டி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.