ஹீரோ மோட்டோகார்ப் XOOM என்னும் உயர்தொழில்நுட்பம் வாய்ந்த 110சிசி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது
ஹீரோ மோட்டோகார்ப் XOOM என்னும் உயர்தொழில்நுட்பம் வாய்ந்த 110சிசி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது
ஸ்கூட்டர் வகையை மறுவரையறை செய்து, ஸ்கூட்டர் பிரிவில் அதன் தொழில்நுட்பம் சார்ந்த பயணத்தின் அடுத்த கட்டத்தை எட்டிடும் வகையில், உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், இன்று Xoom என்னும் ஒரு புதிய 110cc ஸ்கூட்டரை தமிழ்நாட்டின் சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.தங்களது தினசரி பயணத்தில் சாகச உணர்வையும் மற்றும் குதூகலத்தையும் எதிர்நோக்கும் தற்போதைய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள Xoom ஸ்கூட்டர், சமகால வடிவமைப்பு, சிறந்த கையாளுதல்திறன், ஈடு இணையற்ற ஆற்றல் மற்றும் அசாதாரண செயல்திறன் ஆகியவற்றை வழங்குகிறது.ஹீரோ Xoom 110cc பிரிவில் ஒரு புதிய புதிய தோற்றத்தை உள்ளடக்கியது. தொழில்துறையில் முதல் முறையாக – ஹீரோ கார்னர் பென்டிங் லைட், மற்றும் வகையினத்தில் முதல் அம்சமாக பெரிய மற்றும் அகலமான டயர்கள் மற்றும் 110cc பிரிவில் துடிப்பான முடுக்கம் ஆகியவை உரிமையாளர்களுக்கு இணையற்ற இயக்க அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
ஹீரோ இண்டலிஜெண்ட் கார்னரிங் லைட்TM 110cc பிரிவில் ஹீரோ Xoom உடன் அறிமுகமாகிறது. இது, வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது. ரைடர் திரும்பும்போது அல்லது ஒரு வளைவில் பயணிக்கும்போது இருண்ட மூலையில் உள்ள பகுதிகளில் பிரகாசமான, தெளிவான ஒளியுடன் HiCL ஒளிரச் செய்யும். சாலையில் உள்ள மூலைகளின் வெளிச்சம் கிடைப்பது பயணத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதனால் இரவில் பாதுகாப்பான சவாரி உறுதி செய்யப்படுகிறது