திரு.மோகன்ராஜ் அவர்கள் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்ராஜ் அவர்கள் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்ராஜ் அவர்கள் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்கு, வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும். நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும், அதனை அடையாளங்கள் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்து வதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும், நான் உளமார உறுதி கூறுகிறேன் என்று காவல்துறையினர் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளபட்டது.இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஜவஹர்லால் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வளர் திரு.சண்முகம், மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் கலந்துகொண்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *