பாலக்கோடு அரசு கலைக்கல்லூரியில் மகாத்மாகாந்தி நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு.
தர்மபுரி மாவட்டம் பாலக்கேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மகாத்மா காந்தியின் உருவ படத்திற்க்கு கல்லூரி முதல்வர் செண்பகஇலட்சுமி, பேராசிரியர்கள், மணவ – மாணவிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றனர்.
மேலும் சர்வ சமய பாடல்களான இந்து, முஸ்லீம், கிருத்துவ பாடல்களை பாடி மத ஒற்றுமையை வலியுறுத்தினார்.
முன்னதாக 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், கல்லூரி அலுவலக ஊழியர்கள் என திராளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மூன்றாமாண்டு மாணவர்கள் நந்தகுமார் மற்றும் பத்மாவதி செய்திருந்தனர்.