ஊத்தங்கரையில் காவல்துறை வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல்துறை மற்றும் டவுன் பஞ்., சார்பில், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, ஊத்தங்கரை டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமை வகித்தார். ஊத்தங்கரை டவுன் பஞ்., தலைவர் அமானுல்லா, தி.மு.க., நகர செயலாளர் பாபு சிவகுமார், வணிகர் சங்கத் தலைவர் செங்கோடன், செயலாளர் உமாபதி, டாக்டர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், ஊத்தங்கரை டவுன் பஞ்., உட்பட்ட கிருஷ்ணகிரி திருவண்ணாமலை செல்லும் சாலையின் இரு புறமும்,சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. இதில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது, அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல்,போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வண்ணம், அந்தந்த கடை உரிமையாளர்கள் அவர்களது கடையின் முன்பு அமைக்கப்பட்டுள்ள, சாக்கடை கால்வாய் மீது ஆக்கிரமிப்பு செய்யகூடாது என கூறினர். ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, டவுன் பஞ்., மற்றும் போலீஸ் துறை சார்பில் எச்சரித்தனர். கூட்டத்தில் அனைத்து வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்கள்.
0Shares

Leave a Reply