16 வருடங்களுக்குப் பின்பு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா
திண்டுக்கல் மாவட்டம் பழனிஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 16 வருடங்களுக்குப் பின்பு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா மிக சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்தது. விழாவில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர், செந்தில்குமார் மற்றும்காவல்துறைஅதிகாரிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் இரண்டு கோபுரங்களுக்கும் ஹெலிகாப்டர் மூலமாக மலர்கள் தூவி கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என்று விண்ணை முட்டும் அளவிற்கு சரண கோஷம் எழுப்பினர். இவ்விழாவிற்கு இந்து அறநிலை துறை, காவல் துறையினர் , மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறந்த முறையில பாதுகாப்பு் ஏற்பாடு செய்திருந்தனர். பின்பு அனைவருக்கும் பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.