26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார்..மாவட்ட இணை செயலாளர் ராஜசேகரன், மாவட்ட பொருளாளர் தாலிப், மாவட்ட செயலாளர் பிரதீப் நரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அண்ணா குபேரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மில்கி ராஜா சிங் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் 50க்கும் மேற்பட்ட நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டு களபணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், கள பணியாளர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும்,உட்பிரிவு செய்ய முடியாத இன மனுக்களின் மீது கூட்டு பட்டா பரிந்துரை வழங்க வேண்டும்,நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும்,காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமிக்க வேண்டும்,துணை ஆய்வாளர்கள்,ஆய்வாளர் ஊதிய முரன்பாடுகளை களைந்திட வேண்டும்,அனைத்து வட்டங்களுக்கு ஒரு டி.ஜி.பி.எஸ் கருவி வழங்கிட வேண்டும்,தமிழகம் முழுமைக்கும் நவீன மறு நில அளவை திட்டம் துவங்க வேண்டும்,திட்டப்பணியில்,பணியா ற்றும் களப்பணியாளர்களுக்கு மலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது அவர்கள் பணிச்சுமை அதிகமாக உள்ளது.ஊழியர்கள் குற்றம் செய்து விட்டதாக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,கூடுதலாக பேப்பர் பார்க்கவில்லை என்று நடவடிக்கை எடுக்கின்றனர்.அந்த நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.