பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பரபரப்பு பேச்சு.
தூத்துக்குடியில் நான்கு ஆண்டு காலம் எம்.பி ஆகவுள்ள கருணாநிதி மகள் கனிமொழி என்ன செய்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பரபரப்பு பேச்சு.தூத்துக்குடி ஜன 24,அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வி.வி.டி சிக்னர் மைதானத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர் ஏ.முருகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி, வெற்றிச்செல்வன், முன்னாள் கவுன்சிலர் சென்பகசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி கிழக்கு பகுதி செயலாளரும்ன முன்னாள் துணை மேயருமான பி.சேவியர் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது.அதிமுக வை நிறுவிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யின் பிறந்த நாளை கொண்டாடும் முழுதகுதி படைத்தவர்கள் எடப்பாடியார் தலைமை ஏற்றுள்ள நாம் தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் செய்த நல்ல திட்டங்களாலும் நல்ல ஆட்சியினாலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் யின் ஆட்சியை தருவேன் என்றே இன்றைய கால அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். யாரும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சியைத் தருவேன் என்று பேசுவது இல்லை. தூத்துக்குடியை பொருத்த வரையில் எம். பி ஆக இருப்பவர் கருணாநிதியின் மகளும் முதல்வர் ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி இவர் 4 ஆண்டு காலம் பதவியில் இருந்தாலும் தூத்துக்குடி என்று பெரிதாக எந்த திட்டத்தையும் செய்து தரவில்லை என்றும் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்க கனிமொழி எம்.பி வைத்தே அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இது அரசின் நெரிமுறையை மீறிய செயலாகும் என்றும் தூத்துக்குடி சலவைத் தொழிலார்கள் கடந்த 65 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சலவைக்கூடத்தில் எடப்பாடியார் ஆட்சிக் காலத்தில் மாநகராட்சி நிறுவாகம் வனிக வளாகம் மற்றும் சலவைக்கூடம் அமைத்துக் கொடுத்தது அதன் அருகில் தற்போது சலவைத் தொழிலார்களின் பயன்பாட்டில் இருந்த அந்த இடத்தை சிறுவர் பூங்கா அமைத்து மாநகராட்சி நிறுவாகம் பரிக்க முயற்சிக்கிறது. இது வண்மையாக கண்டிக்கத் தக்கது. 500 மீட்டர் இடைவெளியில் மாநகராட்சியின் மூன்று பிரமாண்ட பூங்காக்கள் இருக்க காலம் காலமாக சலவைத் தொழிலார்கள் பயன்படுத்தி வரும் அந்த இடத்தில் பூங்கா தேவைதான என்றும் அவர்களுக்கு அவ்விடத்தில் அவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த இடத்தை துணி உளர்த்த பயன்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் வசதி செய்து தர வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பரபரப்பாக பேசினார்.இந்தப் பொதுக்கூடத்தில்கழகஅமைப்புச்செயலாளர்என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், இணைச் செயலாளர் செரினா, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் காசிராஜன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவஹர், சார்பு அணி செயலாளர்கள் வழக்கறிஞர் யு.எஸ்.சேகர், நடராஜன், டேக் ராஜா, ஜெ.ஜெ.தனராஜ், கே.ஜே.பிரபாகர், அருண்ஜெபக்குமார், பில்லா விக்னேஷ், சுதர்சன்ராஜா, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல செயலாளர் கல்விக்குமார், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் பிரபு, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன்ஆதித்தன், கோமதிமணிகண்டன், ஆன்ட்ருமணி, பிள்ளை விநாயகம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், முத்துக்கனி, முருகன், துணைச்செயலளர் ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், வக்கீல்கள் சரவணபெருமாள், சிவசங்கர், நிர்வாகிகள் மனுவேல்ராஜ், பிராங்கிளின் ஜோஸ், எம்.பெருமாள், முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி, முத்துமதி, சாந்தி, பெரியசாமி, பொன்ராஜ், டேவிட் ஏசுவடியான், மனோகர், பிரவின் ஜெயக்குமார் நிர்வாகிகள் பி.ஜே.சி.சுரேஷ், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், எ.கே.மைதின், ஜான்சன்தேவராஜ், மிக்கேல்,அண்ணாதொழிற்சங்கம்போக்குவரத்துபிரிவஆதிராஜ்வெள்ளையா, பொன்சிங், பாலசுப்பிரமணியன், முருகவேல், சந்தனமாரியப்பன், பொன்னம்பலம், மின்சார பிரிவு ஜவஹர், மகாராஜன், ஆனந்தராஜ், ஜேசுராஜ், நிர்வாகிகள் கே.கே.பி.விஜயன், எஸ்.கே.மாரியப்பன், மகாராஜன், பிரபாகரன், உலகநாதபெருமாள், வட்ட செயலாளர்கள் சொக்கலிங்கம், ராமச்சந்திரன், கொம்பையா, புற்றுக்கோவில் முருகன், வெங்கடேஷ், அண்டோ, அருண்ஜெயக்குமார், மணிவண்ணன், உதயசூரியன், மணிகண்டன், ஜெயக்குமார், அந்தோணிராஜ், ஈஸ்வரன், ரவிந்திரன், பூர்ணசந்திரன், செல்வராஜ், முருகேசன், மாடசாமி, மாரிமுத்து, யோவான், ஏசுதாஸ், மகளிர்கள் இந்திரா, பத்மாவதி, அன்னத்தாய், முத்துலெட்சுமி, மருதம்மாள், முல்லையம்மாள், பானுமதி மற்றும் சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, உதயகுமார், இளையராஜா, ராஜன்கண்ணா, நிலாசந்திரன், தீனாவசந்த், ஆனந்த், சரவணவேல், சுப்பிரமணி, யுவன் பாலா, மைதின், மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
—