பாஜக சார்பில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக பாலரங்காபுரம் கிளைத் தலைவர் மற்றும் மண்டல் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் காமராஜர் சாலை அமுதம் ஹோட்டலில் மண்டல் அமைப்பாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு முன்னிலை வகித்தனர், கூட்டத்தில் மண்டலுக்குட்பட்ட 44கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியினை மண்டல் பார்வையாளர் மற்றும் அமைப்பு சாரா பிரிவு மாநில செயலாளர் ரௌத்திரன் ஜெகதீஷ், மண்டல் நிர்வாகிகள் பிரதீப் குமார், சஞ்சய், தினேஷ், அம்பரீஷ், மாவட்ட துணைத் தலைவர் கீரைத்துறை குமார், ரோஜா ராணி, பொதுச் செயலாளர் துரை பாலமுருகன், மாவட்ட பொருளாளர் ராஜ் குமார், ஓ பி சி அணி மாநில செயற்குழு உறுப்பினர் மார்க்கெட் ராஜா கண்ணன், பட்டியல் அணி மாநில செயலாளர் சரவணன், தமிழ் இலக்கிய கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் ஞானேஸ்வரன், இளைஞர் அணி மாவட்ட பார்வையாளர் நவீன் அரசு, இளைஞர் அணி மாவட்ட தலைவர் பாரிராஜா ஜெயவேல், மகளிர் அணி மாவட்ட செயலாளர் மெகர்நிஷா, ஐட்டி விங்க் மாநில செயலாளர் விஸ்வநாத், ஐட்டி விங்க் மாவட்ட தலைவர் மணிவண்ணன் மற்றும் மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.